விபத்தில் தாய் தகப்பன் கண் எதிரில் குழந்தை பலி

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே யு.கொத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் நாகராஜ் (30). ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முனியம்மாள் (25) இவர்களுக்கு கிருத்திகா என்ற 4 வயது குழந்தை உள்ளது. நாகராஜ் தனது மனைவி, மகளுடன் பைக்கில் ராயக்கோட்டை சென்றுள்ளார். அப்போது கெலமங்கலம் நோக்கி வந்த சரக்கு வாகனம் கூத்தனபள்ளி பகுதியில் நாகராஜின் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சிறுமி கிருத்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நாகராஜ், முனியம்மாள் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :