கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடரும் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை

by Editor / 20-11-2021 02:55:45pm
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடரும் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாம்பாறு அணை தொடர் கனமழையின் காரணமாக நேற்று நிரம்பி அதிக நீர் வெளியேற்றி வந்த சூழலில் தொடர்ச்சியாக இன்றும் இரண்டாவது நாளாக அணையின் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்ட நிலையில் பாம்பாறு அணையின் மொத்த கொள்ளளவு 19.60 அடி உயரத்தில் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ள காரணத்தினால் அணைக்கு வரக்கூடிய நீர் வெளியேற்றப்படும் சூழலில் அணைக்கு நீர் வரத்து 12 ஆயிரத்து 510 கன அடி வீதம் வந்து கொண்டுள்ளது. அணையின் நலன்கருதி வினாடிக்கு 13493 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது இதனால் ஆற்றுப்படுகையில் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும்  நல்லா கவுண்டனூர் சென்னூர் இடையே தரைபாலம் அமைக்கப்பட்டது.தரைபாலத்தை அப்பகுதி கிராம மக்கள் பயன்படுத்திவந்த  சுமார் 350 குடும்பங்கள் அருகில் உள்ள காரப்பட்டு பகுதிக்கு விவசாயிகள் அன்றாடம் பால் ஊற்ற மற்றும் விவசாய பொருட்களை கொண்டு செல்ல பயன்பட்ட தரைப்பாலம் தற்போது தண்ணீரில் மூழ்கியதால் அப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories