சட்டையை மாற்றுவது போல் கொள்கை மாற்றம்.. நடிகை ஸ்ரீப்ரியா

by Editor / 09-07-2021 07:58:46pm
சட்டையை மாற்றுவது போல் கொள்கை மாற்றம்.. நடிகை ஸ்ரீப்ரியா

மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் துணை தலைவராக இருந்த மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மைய துணைத் தலைவர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் மகேந்திரன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சி மற்றொரு பிரபலமான பத்மபிரியா திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதையடுத்து நடிகை ஸ்ரீப்ரியா கடும் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சட்டையை மாற்றுவது போல் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் சில அரசியல் காரியவாதிகள், எல்லா கட்சி சின்னத்துடன் சட்டைகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள், மாற்ற வசதியாக இருக்கும் என்று விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via