லெபனான் -சிரியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உள்ளது

by Admin / 20-09-2024 01:20:24am
லெபனான் -சிரியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உள்ளது

லெபனான் -சிரியா முழுவதும் மக்களால் பயன்படுத்தப்பட்ட  பேஜர், வாக்கி டாக்கிகள் தொடர் வெடிப்பின் காரணமாக இரண்டு நாட்கள் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். இஸ்ரேல்- லெபனான் இரண்டு நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு நாட்களில் பேஜர் ,வாக்கி டாக்கி ,ரேடியோ ,கைபேசி வெடித்து சிதறி லெபனான் -சிரியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உள்ளது .இதில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் .இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இன்னும் பொறுப்பு ஏற்கவில்லை..  இஸ்ரேலின் மீது கமாஸ் தாக்கிய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்ற காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இருந்து ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலும் குறைந்த அளவிலான மோதல் போக்கிலே ஈடுபட்டுள்ளன.. உள்நாட்டு கொந்தளிப்பு பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு அரசியல் அதிகாரத்தை வெளிப்படுத்தியது. ஹெஸ்பொல்லாவை ராணுவ பலத்துடன் எதிர்கொண்டு... இஸ்ரேலிய மக்கள் 60,000 க்கு மேற்பட்டோர் அக்டோபர் 7-ல் வெளியேற்றப்பட்டனர்.

 

லெபனான் -சிரியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உள்ளது
 

Tags :

Share via

More stories