கனிமம் கடத்தலுக்கு எதிராக குரல்கொடுத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் வாகனம் ஏற்றி கொலை.

கனிமவள கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலரை லாரி ஏற்றி கொலை செய்த வழக்கில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை திருமயம் பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜகபர் அலி. கடந்த மாதம் 17ஆம் தேதி மினி டிப்பர் லாரி (407) மோதி உயிரிழந்தார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவர், சட்டவிரோதமாக கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகள் மீது வழக்குகளை தொடுத்து, கனிமவள கொள்ளையை தடுக்க போராடி வந்ததால், லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் தலைமறைவாக இருப்பவர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.அவரது மனைவி கூறும்போது எங்களது உயிருக்கும் அச்சமுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Tags : கனிமம் கடத்தலுக்கு எதிராக குரல்கொடுத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் வாகனம் ஏற்றி கொலை.