ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் :திமுக, நாதக உள்ளிட்ட 46 பேர் களத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 பேர் களத்தில் உள்ளனர். வேட்பாளர் பட்டியலில் இருந்த வெளிமாநில வேட்பாளரின் பெயர் நீக்கப்பட்டது. இந்த தொகுதியில் வருகிற பிப்., 05ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளதால், திமுக, நாதக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
Tags : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் :திமுக, நாதக உள்ளிட்ட 46 பேர் களத்தில் உள்ளனர்.