அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில் அக்கட்சியை சேர்ந்த செந்தில் முருகன் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக தலைமை அறிவித்தது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்துள்ளார். தொடர்ந்து திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Tags : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்துள்ளார்.