10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கு

by Admin / 26-08-2021 04:57:41pm
10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கு

குழந்தையின் வாய்ப்பகுதி, தொண்டைப்பகுதி முழுவதும் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டதில் தொண்டையில் ஊக்கு ஒன்று சிக்கி இருப்பது தெரியவந்தது.

கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி நகர் பகுதியில் வசிப்பவர் சிக் ஆப்தீன். இவருக்கு முகமது என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது.
 
நேற்று காலை குழந்தையை அவரது தாயார் குளிப்பாட்டிக் கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் குழந்தை அழத்தொடங்கியது. குழந்தை அழ காரணம் என்ன? என தெரியாமல் தாயார் தவித்தார்.

குழந்தை வாயை மூட முடியாமல் அவதிப்பட்டது. சிறிது நேரத்தில் மூச்சுவிட முடியாமலும் குழந்தை திணறியது. சிறிது நேரத்தில் குழந்தை மயங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உடனடியாக குழந்தையின் வாய்ப்பகுதி, தொண்டைப்பகுதி முழுவதும் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.

அப்போது குழந்தையினுடைய தொண்டையில் ஊக்கு ஒன்று சிக்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக குழந்தையினுடைய மூக்குப் பகுதியிலும், வாய்ப்பகுதியிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த ஊக்கு வெளியே எடுக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த அறுவை சிகிச்சை நடந்தது. தொடர்ந்து அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

 

Tags :

Share via