மாணவனை கண்டித்த தலைமை ஆசிரியரை துப்பாக்கி காட்டி மிரட்டிய மாணவன்...
உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவனை கண்டித்த தலைமை ஆசிரியரை அந்த மாணவன் துப்பாக்கி காட்டி சுட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகுவாலாவில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தினமும் பிரேயர் கூட்டம் நடைபெறும். இன்றும் வழக்கம்போல் நடைபெற்ற கூட்டத்தின் போது, அங்கு நின்றிருந்த மாணவர் ஒருவர் சீருடை அணியாமலும், முடி வெட்டாமலும், நகை அணிந்து கொண்டும் கலந்து கொண்டார். இதை அறிந்த தலைமை ஆசிரியர் கோபமடைந்து அவனை அறைக்கு அழைத்து சென்று கண்டித்தார்.
அப்போது ஆத்திரமடைந்த மாணவன் தீடிரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தலைமை ஆசிரியரை சுட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிடவே மாணவன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
பின்னர் அந்த மாணவரை பற்றி விசாரித்த போது அவர் அந்த பள்ளியின் மாணவர் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இச்சம்பவம் குறித்து அந்த பள்ளி நிர்வாகம் மாணவன் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினர். போலீசார் வழக்கு பதிந்து அந்த மாணவனை பற்றி விசாரித்து வருகின்றனர்.
Tags :



















