பேனர் கம்பம் விழுந்து விபத்து - ஒருவர் பலி

கர்நாடக மாநிலம் தாவணகெரே, நெட்டு வள்ளியில் சாலையின் நடுவே பேனருக்காக வைக்கப்பட்டிருந்த கம்பம் திடீரென சாய்ந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்ற டெம்போ வேன் மீது கம்பம் விழுந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பைக்கில் வந்த கணேஷ் (40) என்பவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Tags :