உரிய அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 8 லட்சம் பறிமுதல்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிந்தலவாடி பெட்ரோல் பங்க் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக காரைக்காலைச் சேர்ந்த வடிவேல்ராஜ் என்பவர் ஓட்டி வந்த கண்டெய்னர் லாரியை சோதனையிட்டுள்ளனர். அப்போது அவரது வாகனத்தில் இருந்து ரூ. 4, 75, 000 கொண்டுவரப்பட்டதை கண்டறிந்தனர். அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி பணத்தினை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அதனை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குளித்தலை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
அதே போல் குளித்தலை அருகே மருதூர் செக் போஸ்டில் திருச்சி சீனிவாசா நகரை சேர்ந்த விஜயக்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தினையும், குளித்தலை அருகே சின்ன ரெட்டியப்பட்டியில் மினி சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1. 05 லட்சம் பணத்தினையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து குளித்தலை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல் குளித்தலை அருகே புலியூரில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா செல்வதற்காக கேரளா மாநிலத்திலிருந்து வந்த ஸ்ரீஜித் என்பவரிம் ரூபாய் 1. 30 லட்சம் பணத்தினை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
Tags :