குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகரைச் சேர்ந்த தம்பதி கவின் பிரசாத் - அமராவதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற மகன் உள்ளார். தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அமராவதி கணவர் வீட்டில் இல்லாதபோது, குழந்தையை கொன்றுவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த வெள்ளோடு போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :