இன்று தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 மாலை 6:00 மணிக்கு .....

by Admin / 09-01-2026 11:20:22am
இன்று தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 மாலை 6:00 மணிக்கு .....

இன்று தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூர் மாவட்ட வேப்பூர் பாசார் கிராமத்தில் மாலை 6:00 மணிக்கு நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்க உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடு குறித்து இந்த மாநாட்டில் பிரேம லதா விஜயகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று ஏற்கனவே அவர் பல்வேறு பேட்டிகளின் போது தெரிவித்திருந்தார். அதனால் இன்று அவர் எந்த கட்சியோடு கூட்டணியில் பங்கேற்கப் போகிறோம் என்பதை உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று மதியம் 2:30 மணி அளவில் பிரேமலதா விஜயகாந்த் மாநாட்டு திடலுக்கு வந்து கொடியேற்றி வைக்க உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் கலை நிகழ்ச்சி ,பட்டிமன்றம் ,கலாச்சார நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளார். கிட்டத்தட்ட 150 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டு தேமுதிக தொண்டர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் அவர்கள் வசதிக்காக குடிநீர் கழிப்பறை மற்றும் வாகன நிறுத்தமிடம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாடு தேமுதிகவின் எதிர்கால அரசியலுக்கான ஒரு அட்சரமாக பார்க்கப்படுகிறது.

இன்று தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 மாலை 6:00 மணிக்கு .....
 

Tags :

Share via

More stories