சம வேலைக்கு சம ஊதியம் 15 நாட்களாக போராட்ட களத்தில் இடைநிலை ஆசிரியர்கள்....
சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை முன்வைத்து கடந்த 15 நாட்களாக போராட்ட களத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று அவர்கள் சேப்பாக்கம் வழியாக தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் பேரணியை தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களில் போராட்ட வடிவங்களை உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் பேரணி என வடிவமைத்து அரசின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்கள். டி.பி.ஐ வளாகத்தில் தொடங்கிய போராட்டம் நாளுக்கு நாள் வ வலுத்துக் கொண்டே இருக்கிறது. அரசு தரப்பில் பள்ளி கல்வி இயக்குனரும் தொடக்கக் கல்வி இயக்குனரும் பேச்சு வார்த்தை நடத்தியும் சுமுகமான தீர்வு எட்டப்படாததனால் தொடர்ந்து போராடி வருகின்றனர். தங்களுக்கு வழங்கப்படுகிற ஊதிய முரண்பாட்டின் மூலம் 20,000 ரூபாய்க்கு மேல் இழக்க வேண்டி இருப்பதாகவும் புதிய உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த அடிப்படைச் சம்பளத்தை வைத்து ஓய்வூதிய வழங்கப்பட உள்ளதால் தாங்கள் பின்னரும் பாதிக்கப்படுவோம் என்கிற கருத்தை அவர்கள் வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வரும் தங்களுடைய கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்கிற உறுதியான நிலைப்பாட்டோடு போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
Tags :



















