திருமணம் தாண்டிய உறவால் 6 வயது மகனை பரிதாபமாக பறிக்கொடுத்த வடமாநில பெண்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணாம்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் 300 மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் 140க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் நூற்பாலை விடுதியில் தங்கி உள்ளனர்.இதில் 9 வருடங்களாக ஒரிசாவை சேர்ந்த கனுதாஸ் என்பவர் விடுதியில் தங்கி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த அனிடா நாயக் என்பவர் ஏற்கனவே இரண்டு திருமணம் ஆன நிலையில் கடந்த மூன்று வருடமாக அதே நூற்பாலை விடுதியில் தனது 6 வயது மகன் கணேசுடன் தங்கி நூற்பாலையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மேற்பார்வையாளர் கனுதாஸ்க்கும் அனிடா நாயக்குக்கும் திருமணம் தாண்டிய உறவாக பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் கனுதாஸ்சுடன் ஏற்பட்ட பழக்கம் அனிடா நாயக்கு கசந்து போகவே அதே நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த ஒரிசாவை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து கனுதாஸ் அனிடா நாயக்கிடம் கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் கோபம் கொண்ட கனுதாஸ் அனிடா நாயக் மற்றும் சுரேஷை பழிவாங்க காத்து கொண்டிருந்தார். இந்நிலையில் 10 தினங்களுக்கு முன்பு கனுதாஸ் குடித்து விட்டு நூற்பாலையில் வேலை செய்ததால் நூற்பாலை நிர்வாகம் கனுதாஸை கண்டித்து மேற்பார்வையாளர் பதவியில் இருந்து பதவி இறக்கம் செய்தது.மேலும் சுரேஷ்என்பவர்க்கு மேற்பார்வையாளர் பதவியை வழங்கியுள்ளது.இந்நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட விரக்தியில் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது குடித்து வந்த கனுதாஸ் ஏற்கனவே தனது கள்ளக்காதலி அனிடா நாயக் சுரேஷ்வுடன் பழகி வந்த நிலையில்,சுரேஷ்க்கு தனது மேற்பார்வையாளர் வேலையை நூற்பாலை நிர்வாகம் வழங்கியதால் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். இதில் இருவரையும் பிரிக்க வேண்டும் சுரேஷிடம் இருந்து தனது மேற்பார்வையாளர் பதவியை திரும்ப பெற வேண்டும் என்ற மனநிலைக்கு சென்ற கனுதாஸ் அனிடா நாயக் மகனை கொலை செய்தால் இருவரும் பிரிந்து விடுவார்கள்,தனது பதவியும் திரும்ப கிடைத்து விடும் என திட்டம் தீட்டியநிலையில் கடந்த 8ம் தேதி விடுதி அறையில் தனியாக இருந்த 6 வயது சிறுவனை விடுதியின் பின்புறம் அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து அங்குள்ள முற்புதரில் வீசியுள்ளான்.தனது மகனை காணவில்லை என அனிடா நாயக் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சிறுவனை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் முட்புதருக்குள் 6 வயது சிறுவனின் உடல் கிடப்பதாக தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில் போலிசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலி மற்றும் கள்ளக்காதலனை பழிவாங்க 6 வயது சிறுவன் கணேஷை கொலை செய்து விட்டு கனுதாஸ் தலைமறைவானது தெரிய வந்தது.தலைமறைவாக இருந்த கனுதாஸை போலீசார் தேடி வந்த நிலையில் காரணாம்பேட்டை நால்ரோடு பகுதியில் பதுங்கி இருந்த கனுதாஸை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்காதலியை பலி தீர்க்க அவரது 6 வயது மகனை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags : திருமணம் தாண்டிய உறவால் 6 வயது மகனை பரிதாபமாக பறிக்கொடுத்த வடமாநில பெண்