ஜனநாயகன் படத்திற்கு சான்று வழங்கிட சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

by Admin / 09-01-2026 10:51:46am
ஜனநாயகன் படத்திற்கு சான்று வழங்கிட சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

ஜனநாயகன் படத்திற்கு சான்று வழங்கிட சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. இன்று வெளியாக இருந்த நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகம் படத்திற்கு தணிக்கை குழு தணிக்கை வழங்காமல் காலதாமதம் செய்ததை தொடர்ந்து நீதிமன்றத்தில் பட நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒன்பதாம் தேதி வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்பிட்டிருந்தது. இன்று சென்னை உயர்நீதி மன்றம் தணிக்கை சான்று கோரிய வழக்கில் ஜனநாயகன்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதோடு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கவும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு சில நாட்களில் பொங்கலுக்கு முன்பாக படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஜனநாயகன் படத்திற்கு சான்று வழங்கிட சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
 

Tags :

Share via