டீக்கடை மீது லாரி மோதியதில் பெண் உட்பட 5 பேர் பலி

by Staff / 30-12-2023 12:38:28pm
டீக்கடை மீது லாரி மோதியதில் பெண் உட்பட 5 பேர் பலி

புதுக்கோட்டை அடுத்த நமண சமுத்திரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உட்பட ஐந்து பேர் பலியாகினர்.
தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள டீககடையில் அமர்ந்திருந்த பக்தர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழுந்து விபத்தில் சிக்கியது. விபத்தில் காயம் அடைந்த 19 பேர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நமணசமுத்திர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo