பெட்ரோல் டேங்க் லாரி வெடித்து 40 பேர் பலி

லைபீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்ததில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்திற்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல் கசிந்துகொண்டிருந்தது. அப்போது மக்கள் அதனை பாட்டில்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். திடீரென டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது. இதனால் பலரது உடலில் தீப்பற்றி அலறி அடித்து ஓடினர். இந்த தீ விபத்தில் 40 பேர் வரை உயிரிழந்தனர். பலர் தீக்காயம் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.
Tags :