கிரிக்கெட் விளையாடும் போது மாரடைப்பால் இளைஞர் பலி

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். பெத்தஞ்சேர்லா நகரில் உள்ள சஞ்சீவநகர் காலனியைச் சேர்ந்த மகேந்திரா (22) ஞாயிற்றுக்கிழமை மதியம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Tags :