திருமண நிகழ்வை துக்க நிகழ்வாக மாற்றிய நண்பர்கள் - மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி கொலை.

by Editor / 17-11-2024 10:24:34am
திருமண நிகழ்வை துக்க நிகழ்வாக மாற்றிய நண்பர்கள் - மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி கொலை.

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவருக்கு இன்று திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், திருமணத்திற்கான முன்னேற்பாடு பணிகளை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தீவிரமாக செய்து வந்துள்ளனர்.

 இந்த நிலையில், நேற்று இரவு திருமண மண்டபத்தில் நண்பர்களுக்கு மது விருந்து நடைபெற்ற நிலையில், இந்த விருந்தின் போது இலஞ்சிப் பகுதியை சேர்ந்த முனியாகணேசன் என்பவருக்கும், காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த பட்டு என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகராறு முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்ட நிலையில், முனியாகணேசன் தான் வைத்திருந்த அரிவாளை வைத்து பட்டுவின் கழுத்தில் வெட்டியுள்ளார்.

இதை பார்த்த அவரது நண்பரான அருண்குமார் என்பவர் தடுக்க முயன்றபோது, அவரது கையிலும் வெட்டு விழுந்த நிலையில், இந்த சம்பவத்தில் பட்டு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த குற்றாலம் போலீசார் பட்டுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முனியா கணேசன் மற்றும் அவருடன் இருந்த 2 நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும், திருமணம் வீட்டில் நடைபெற்ற மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : திருமண நிகழ்வை துக்க நிகழ்வாக மாற்றிய நண்பர்கள் - மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி கொலை.

Share via