RBI விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது

by Editor / 29-05-2025 03:47:17pm
RBI விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் இன்று (மே 29) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கி விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது. ரிசர்வ் வங்கி விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி நகை கடன் தரப்பட்டுள்ளது என்றார். மேலும் நியாய விலை கடைகளில் ஆள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo