தமிழ்நாடு சட்டப்பேரவையில் 17வது கூட்டத்துடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரின் உரையுடன் தொடங்கியது

by Admin / 18-06-2026 12:22:16pm
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 17வது கூட்டத்துடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரின் உரையுடன் தொடங்கியது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 17வது கூட்டத்துடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரின் உரையுடன் தொடங்கியது. தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை  தமிழில் வணக்கம் என்று சொல்லி முழுமையாக வாசித்தார். அவர் வாசித்ததற்கு பின்னால் பேரவை தலைவர் ஜேசிபி பிரபாகரன் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்தார். மாநிலத்திற்கு மத்திய அரசு நியாயமாக வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குதல் மற்றும் பள்ளிகள் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 717 மது கடைகளை மூடியது போன்ற அரசின் முக்கிய நடவடிக்கைகளை உரையில் சுட்டி காட்டியதோடு எம்ஜிஆர்க்கு பிறகு தனித்து நின்று ஆட்சியை பிடித்தவர் விஜய் என்றும் 2034க்குள் வெற்றி தமிழகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்றும் மேகதாது அணை, உதவி பேராசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உரையில் இடம் பெற்றிருந்தன. தமிழ் தாய் வாழ்த்து உடன் தொடங்கி தேசிய கீதத்துடன் இன்றைய முதல் நாள் கூட்டம் நிறைவு பெற்றது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறள் பேரறிஞர் அண்ணா மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை குறிப்பிட்டு ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டிருந்தது. இன்று மதியம் பேரவை தலைவர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் இந்த தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 17வது கூட்டத்துடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரின் உரையுடன் தொடங்கியது
 

Tags :

Share via
Logo