பழனி கோயிலுக்கு ரூ.61 லட்சத்துக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்

ஈரோடு கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு ரூ.61 லட்சத்து 76 ஆயிரத்துக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. நேற்று நாட்டுச் சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் 2,261 மூட்டை நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் 60 கிலோ மூட்டை முதல் தரம் ஒரே விலையாக ரூ.2880க்கும், இரண்டாம் தரம் ரூ.2820க்கும் ஏலம் போனது. இதனை பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க அதிகாரிகள் வாங்கிச் சென்றனர்.
Tags :