உடும்பு வேட்டையாடியவர்கள் கைது.

by Staff / 13-06-2025 10:24:44am
உடும்பு வேட்டையாடியவர்கள் கைது.

 திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் படி வத்தலகுண்டு வனச்சரக அலுவலர் காசிலிங்கம் அவர்கள் தலைமையில் , வனப் பணியாளர்கள் 12.06.2025-ம் தேதி மாலை சுமார் 5 மணி அளவில் மணலூர் பீட் , கன்னிவாடி பிளாக் 1 வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது உடம்பை வேட்டையாடிய சித்தரேவு கிராமம் பகுதியைச் சேர்ந்த சகாதேவன் வயது 19 தகப்பனார் பெயர் ராமு, கருப்பையா வயது 19 தகப்பனார் பெயர் பழனி ஆகியோரை சுத்தி வளைத்து பிடித்து விசாரணை செய்ததில் சித்தரேவு பகுதியை சேர்ந்த  யுவ ராமகிருஷ்ணன் வயது 22 தகப்பனார் பெயர் ஆனந்த் என்பவரும் வேட்டியில் ஈடுபட்டு  தப்பி தலைமறைவாகி விட்டார்  என்பதை  தெரிவித்தனர் மேற்கண்ட 2 எதிரிகளையும் கைது செய்து விசாரணை செய்ததில் அட்டவணை வன உயிரினமான உடும்பை வேட்டையாடியதை ஒப்புக்கொண்டதன் பேரில் இருவரையும் கைது  செய்யப்பட்டனர் தப்பி ஓடிய எதிரி யுவ ராமகிருஷ்ணனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

 

Tags : உடும்பு வேட்டையாடியவர்கள் கைது

Share via