மெட்ரோ கட்டுமான விபத்தில் ஒருவர் பலி.. உடல் மீட்பு

சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணியின்போது, மேம்பால கட்டுமானம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பூந்தமல்லி-போரூர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் சுமார் 40 அடி நீளமுள்ள ராட்சத ‘கர்டர்’ நேற்று இரவு திடீரென சரிந்து சாலையில் விழுந்தது. அப்போது, போரூர் நோக்கி பைக்கில் சென்ற 35 வயது இளைஞர் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Tags :