ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.195 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்வு,

தொடர் திருமண நாட்கள் மற்றும்,பக்ரீத் பண்டிகை காலம் முடிந்தநிலையில் தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்ந்துள்ளது, நகைப்பிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.உலகில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை உச்சம் தொட்டது. ஆனால், மே மாதத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைக் கண்டது.இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, பிறகு 4 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்தது. எனினும், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த வண்ணம் இருந்தது.அதன்படி, நேற்று (12.06.2025) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,100-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இன்று (13.06.2025) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.195 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல, 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,650-க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.61,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :