ரத்தம் சொட்ட சொட்ட... பெண் கதறல்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு கொடூரம் நடந்துள்ளது. திருமணமான பெண் ஒருவர் குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். கல்யாண்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பங்கி சாலையில் கணவருடன் நடந்து சென்ற அப்பெண்ணை தாக்கிய கும்பல் அவரை கொடூரமாக துன்புறுத்தியது. இதை தட்டிக்கேட்ட பெண்ணின் கணவரையும் அவர்கள் கடுமையாக தாக்கினர். இதனால் திருமணமான பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :