பிளஸ்டூ மாணவியை திருமணம் செய்த இளைஞர்... 20 ஆண்டு சிறை

by Staff / 16-09-2022 02:38:16pm
பிளஸ்டூ மாணவியை திருமணம் செய்த இளைஞர்... 20 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்ற 21 வயது இளைஞர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே மாணவிக்கு மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், அஜித் மற்றும் பிளஸ் டூ மாணவி இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து மூன்று நாள் குடும்பம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அஜித் கைது செய்யப்பட்டார்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட.து இந்த தீர்ப்பில் அஜித்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் அவதாரம் விதிக்கப்பட்டது.
 

 

Tags :

Share via

More stories

Logo