மாணவர்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை.. பிப்.,28 கடைசி நாள்

by Staff / 17-02-2025 03:11:58pm
மாணவர்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை.. பிப்.,28 கடைசி நாள்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ( AICTE ) அமைப்பானது, தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த யாசஸ்வி திட்டத்தைச் செயல்படுத்துகிறது. அதன்கீழ் பொறியியல் துறையில் மெக்கானிக், சிவில் போன்ற அடிப்படை பாடப்பிரிவுகளில் சேரும், தகுதியான மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.50,000 உதவித்தொகை செலுத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 28ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்காதவர்கள் www.scholarships.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via