தனியார் மருத்துவமனையில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் செவிலியர் படித்து முடித்து தற்போது பயிற்சி பெற்று வரும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கீதா (19) அந்த செவிலியர் மருத்துவமனை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை. வடசேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மருத்துவ செவிலியர் பயிற்சி மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : தனியார் மருத்துவமனையில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை.