31.7 கிலோ தங்க நகை கொள்ளை சம்பவம் 18 கிலோ மீட்கப்பட்டது.
13.08.2022-ந் தேதி மதியம் 02.30 மணியளவில் அரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே-8 ரசாக் கார்டன் சாலையிைல் இயங்கி வரும் FED வங்கி (வங்கி அல்லாத நிதி நிறுவனம்)
நிதிச்சேவைகள் மையத்தில் கூட்டுக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. மேற்கண்ட வங்கியின் கிளை மேலாளர் கே-சுரேஷ் அளித்த புகாரின் பேரில் கே.8 அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் வங்கி அலுவலகத்தில் அலுவலில் இருந்த வங்கி ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி வங்கி ஊழியரிடம் இருந்த Strong Room சாவியை பறித்து கொண்டு வங்கி ஊழியர்களை ஓய்வு அறையில் அடைத்து விட்டு, வங்கியின் Strong Roomல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின் சுமார் ரூ.15கோடி மதிப்பிலான 31.7 கிலோ எடை கொண்ட தங்க நகை ஆபரணங்களை கொள்ளையடித்துக் கொண்டு, வங்கி ஊழியர்களில் இருவரை Strong Room-ல் வைத்து பூட்டி விட்டு அதன் சாவியுடன் கொள்ளயர்கள் தப்பி சென்றுள்ளது தெரிய வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் கூடுதல் ஆணையாளர், வடக்கு, காவல் இணை ஆணையாளர் மேற்கு
மண்டலம் மற்றும் காவல் துணை ஆணையாளர், அண்ணாநகர் மாவட்டம் ஆகியயோரின் தலைமையிலான தனிப்படையினர் எதிரிகளின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தும், தடயங்கள் மற்றும் ஆதாராங்களை கொண்டு, 1) முருகன் 2) சந்தோஷ், 3) பாலாஜி மற்றும் 4) சூரியா ஆகிய எதிரிகள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் முருகன் ஏற்கெனவே மேற்படி வங்கியில் வேலை செய்து வங்கியின் செயல்பாடுகளை அறிந்தவர் ஆவார். கொள்ளை சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் எதிரிகளான 1)சந்தோஷ் ஆ/வ.30, த/பெ.மோகனகிருஷ்ணன், நெ.93, பாரதி நகர், 2வது
தெரு, வில்லிவாக்கம், சென்னை-49 2)பாலாஜி ஆ/வ.28, த/பெ.வீரராகவன் நெ.1-A, மன்னடி தெரு, வில்லிவாக்கம், சென்னை-49 ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 18 கிலோ கிராம் (ரூபாய்.8.5 கோடி) மதிப்பிலான கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகை ஆபரணங்கள் மீட்கப்பட்டது. மேலும் இக்கொள்ளை சம்பவத்தில் உதவியாக இருந்த செந்தில் குமரன் என்பவரையும், கொள்ளையடிக்க பயன்படுத்திய இரண்டு கார்களையும், ஒரு இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய இதர தலைமறைவு எதிரிகளை பிடிக்க தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில்
தனிப்படை போலீஸார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேற்கு மண்டல காவல் துறையினரின் துரித நடவடிக்கையின் மூலம் மிகவும் பரப்பரப்படைய செய்த இக்கொள்ளை சம்பவத்தின் துப்பு துலங்கப்பட்டுள்ளது.
Tags :