கனமழை எதிரொலி: சென்னையில் 10 விமானங்கள் ரத்து

by Staff / 15-10-2024 04:59:54pm
கனமழை எதிரொலி: சென்னையில் 10 விமானங்கள் ரத்து

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய 14 விமானங்களின் சேவை தாமதமாகி உள்ளன. மேலும் சென்னையில் இருந்து மஸ்கட், கொழும்பு, டெல்லி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via