தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் உயிரிழப்பு.

கர்நாடக மாநிலத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஷிமோகா தாலுக்காவில் உள்ள சோரடி என்ற இடத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு பலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :