நிலுவையில் இருந்த சுமார் 65 ஆயிரம் வழக்குகள் விசாரணை முடிக்கப்பட்டதாக நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் தகவல்.

by Editor / 11-05-2023 10:37:29pm
நிலுவையில் இருந்த சுமார் 65 ஆயிரம் வழக்குகள் விசாரணை முடிக்கப்பட்டதாக நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் தகவல்.

நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ்குமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நெல்லை காவல் சரகத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி,தென்காசி,கன்னியாகுமாரி,தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த வழக்குகள் உட்பட நிலுவையில் இருந்த சுமார் 65,000 வழக்குகள் புலன் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு இதுவரை நெல்லை சரகத்தில் 169 பேர் குண்டத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சமூக விரோதிகள் மற்றும் ரௌடிகள் மீது இந்த ஆண்டு இதுவரை 3298 பேர் மீது பிணையில் வெளிவர முடியாத பிடியானைகள் குற்றவாளிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது.நெல்லை காவல் சரகத்தில் 123 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 270 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.59 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 147 குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் தகவல்.

 

Tags :

Share via