தமிழ்நாட்டில் துணை முதலமைச்சர்கள் விபரம்:

by Editor / 29-09-2024 10:48:21am
தமிழ்நாட்டில் துணை முதலமைச்சர்கள் விபரம்:

தமிழ்நாட்டில்  கடந்த 2006 -11ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலகட்டத்தில் முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். மே 29ம் தேதி 2009ம் ஆண்டு துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 2011-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி முடியும் வரை பொறுப்பில் இருந்தார்.

கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். இதன் மூலம் ஓ.பன்னீர் செல்வம் இரண்டாவது துணை முதலமைச்சராக இருந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

 

Tags : தமிழ்நாட்டில் துணை முதலமைச்சர்கள் விபரம்:

Share via