விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது அவருக்கு தன் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை இல்லை -நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது அவருக்கு தன் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது என்றும் உண்மையான தலைவர்களுக்கு பாதுகாப்பு வலைகள் தேவை இல்லை நான் இரண்டு முறை தோல்வி அடைந்த போதும் ஒரே தொகுதியில் தான் போட்டியிடுகிறேன் என்று குறிப்பிட்ட அவர் பெரிய ஹீரோ என்றால் ஒரே தொகுதியில் நில்லு என்று சவால் விடுத்தார். கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது விஜயை குறிப்பிட்டு பேசியில் கான்ஃபிடன்ட் வேணுமடா தன்னையும் மக்களையும் நம்பாதவன் தான் ரெண்டு தொகுதிகளில் போட்டியிடுவான் என்று ஏக வசனத்தில் வாடா போடா என்கிற பாணியில் சீமான் விமர்சித்து பேசியது அனைத்து தரப்பினரிடம் விமர்சனத்தை கிளப்பி விட்டுள்ளது. இதுகுறித்து அதிமுகவில் முன்னாள் அமைச்சரும் தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய முகங்களில் ஒருவராக இருக்கும் செங்கோட்டையின் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் தேர்தல் வியூகத்துடன் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதை விஜய்யுடன் ஒப்பிட்டு நியாயப்படுத்தினார்.
Tags :


















