இறால் பக்கோடா செய்வது எப்படி?

by Admin / 07-07-2021 05:06:37pm
இறால் பக்கோடா செய்வது எப்படி?

இறால் பக்கோடா

தேவை

     இறால் – 200 கிராம்

     எண்ணெய் – 200 மி.லி

     பாசிபருப்பு மாவு – 50 கிராம்

     உப்புதேவைக்கேற்ப

     பச்சைமிளகாய், பூண்டுசிறிதளவு

     சோம்புத்தூள்சிறிதளவு

     கடலைமாவு – 100 கிராம்

     பொரிகடலை – 50 கிராம்

     அரிசி மாவு  50 கிராம்

     வெங்காயம் – 100 கிராம்

     கறிவேப்பிலைசிறிதளவு

 

செய்முறை

        சுத்தம் செய்த இறால் மீனை சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கவும். இறால் துண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டுதுறுவல், கறிவேப்பிலை, உப்பு சோம்புத்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். கலந்தவுடன் கடலைமாவு, அரிசிமாவு, பாசிப்பருப்பு மாவு, சிறிது சூடாக்கப்பட்ட எண்ணெய் சேர்த்து தண்ணீர் சேர்த்து உதிர்ந்து விடும் பக்குவத்தில் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிதமாக காய வைத்துக் பக்கோடா கலவையை போடும் போது உதிர்த்து போடவும். புரட்டி போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப்பரிமாறவும்.

 

 

 

Tags :

Share via