எடப்பாடி பழனிச்சாமியை சங்கி என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சித்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர்பதிலடி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சங்கி என்றும் அதிமுக பாஜக கூட்டணியை டெல்லி மேட் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். இதற்கு சிவகங்கை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மறைந்த தலைவர்கள் மு கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் ஆகியோர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை காட்டியதோடு பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சங்கி என்று எங்களை சொல்கிறாரே ஸ்டாலின் அப்படி என்றால் வாஜ்பாயுடன் கூட்டணி வைத்த கருணாநிதியும் முரசொலி மாறனும், சங்கிகளாய் என்று அவர் கேள்வி எழுப்பினார். அதிமுகவை விமர்சிக்கும் திமுக ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்து போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதின் மூலம் பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக அவர் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் இனி கூட்டணியே இல்லை என்று கூறிவிட்டு தற்போது கூட்டணி வைத்தது மக்களுக்கு செய்த துரோகம் என்றும் திமுக விமர்சித்து உள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கரூரில் நடந்த திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் திமுக வாஜ்பாய் காலத்தில் கொள்கைகளுக்காக மட்டுமே கூட்டணி வைத்தது என்றும் எடப்பாடி பழனிச்சாமியை போல கட்சியை பாஜகவிடம் அடகு வைக்கவில்லை என்றும் விமர்சித்தார்.
Tags :


















