அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்:
பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான ரவீந்திரன் துரைசாமி, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவின் முன்னணி தலைவர்களின் சாதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் சிவி.சண்முகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சிவி.சண்முகம் நேரில் ஆஜரானார். மேலும் சிவி.சண்முகம் தரப்பில் ரோசனை காவல் நிலைய ஆய்வாளர் நேரில் ஆஜராக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது இதனை ஏற்ற நீதிபதி ரோசனை காவல் ஆய்வாளரை நேரில் ஆஜராகும் போது நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
கடந்த வழக்கு விசாரணையின் போது சி.வி சண்முகம் புகாரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இன்று இந்த வழக்கு சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராக நிலையில் ரோசனை சப் இன்ஸ்பெக்டர் ஆனதராசன் இந்த வழக்கு சம்பந்தமாக இன்று நீதிபதி முன்பு ஆஜரானார் ரோசனை போலீசார் இது சம்பந்தமாக ரவீந்திர துரைசாமிக்கு சம்மன் அனுப்பி நேற்றைய தினம் ஆஜராக சொல்லியிருந்தனர்.ரவீந்திரன் துரைசாமி தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கு கூறி ஆஜராகாமல் வேறு ஒரு நாளில் ஆஜராக போலீசாருடன் தெரிவித்துருந்தார். இது சம்பந்தமாக வருகின்ற 14ஆம் தேதி மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜராக மீண்டும் என போலீசார் தெரிவித்து இருந்தனர்.இது சம்பந்தமாக நீதிபதி முன்பு ரோசனை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.ரோஷனன காவல் நிலையத்தில் ரவிந்தர் துரைசாமி 14ஆம் தேதி ஆஜராகி அளிக்கும் விளக்கத்தை வருகின்ற 18ஆம் தேதி ரோசனை போலீசார் .ரவீந்திரன் துரைசாமியின் விசாரணை அறிக்கையை ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இந்த வழக்கை 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Tags : அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்: