குற்றச்சம்பவங்கள் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல் துறை துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
திண்டுக்கல்லைச் சேர்ந்த பட்டறை சரவணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது இர்பான் சென்ற வருடம் கொலை செய்யப்பட்டார் இதையொட்டி வருகின்ற 28.09.2025 அன்று நினைவு நாள் வருகிறது இதையொட்டி திண்டுக்கல் நகரம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நகர துணை கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில் 25.09.2025 முதல் 30.09.2025 வரை அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க திண்டுக்கல் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கவும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன பதட்டமான இடங்களில் கூடுதல் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் மற்றும் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன மேலும் முன்னாள் குற்றவாளிகளை கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags : குற்றச்சம்பவங்கள் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல் துறை துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!



















