கள்ளக்காதல்: பெண்ணை கொலை செய்த ஆண் நண்பர்

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு காலனி, தங்கராஜ் நகரில் வசித்து வருபவர் ரூபித்தா பானு (50). இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், ரூபித்தா பானு தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ராஜேந்திரன் என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் இவர்களுக்கு இடையே கள்ளக்காதலை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நேற்று காலை இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரன் ரூபிதாவை கீழே தள்ளிவிட, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி ராஜேந்திரனை கைது செய்தனர்.
Tags :