பா. ம. க ராமதாஸ் அணி -சசிகலாஇடையே புதிய அரசியல் கூட்டணி .

by Admin / 21-03-2026 01:10:26am
பா. ம. க ராமதாஸ் அணி -சசிகலாஇடையே புதிய அரசியல் கூட்டணி .

பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் அணியும் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் இடையே புதிய அரசியல் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தைலாபுரம் தோட்டத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் மற்றும் சசிகலா இணைந்து இந்த கூட்டணியை அறிவித்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது தமிழக தேர்தலில் ஒரு வெற்றி பெறக்கூடிய கூட்டணி என்றும் பலருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க அணி, ஏற்கனவே அதிமுக தலைமையான கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் ,டாக்டர் ராமதாஸ் -சசிகலாவுடன் தனியாக கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via