வீட்டின் படிக்கட்டில் அமர்ந்திருந்த மூன்று வயது பெண் குழந்தை கடித்து குதறிய தெரு நாய்

by Editor / 08-04-2025 02:23:18pm
வீட்டின் படிக்கட்டில்   அமர்ந்திருந்த மூன்று வயது பெண் குழந்தை கடித்து குதறிய தெரு நாய்

நாகர்கோவில் . அருகே உள்ள பூதப்பாண்டி என்ற ஊரில். வீட்டின் படிக்கட்டில் அமர்ந்திருந்த மூன்று வயது பெண் குழந்தையை வெறி நாய் கடித்துக் குதறியது   படுகாயம் அடைந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதி . மேலும் மாநகராட்சி ஊழியர் சென்ற இரு சக்கர வாகனத்தின்  குறுக்கே நாய் பாய்ந்ததால்  கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மாநகராட்சி ஊழியர் சுடலைமணி என்பவர் பலியானார்.
*கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஜனவரி,பிப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மட்டும் 4533 பேர்கள்   நாய்கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் கடந்த நான்கு  ஆண்டுகளில் 52 ஆயிரம் பேர் நாய் கடிக்கு மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் அதிர்ச்சி தகவல் -
மாநகராட்சி நிர்வாகம் தெருவில் சுற்றி தெரியும் வெறி நாய்களை. கட்டுப்படுத்த வேண்டுமென. சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும். கோரிக்கை .

 

Tags :

Share via