நாகர்கோவில் உயிர் பலி வாங்கும் நாய்கள் ... சிறுமி படுகாயம், மாநகராட்சி ஊழியர் பலி
நாகர்கோவில் அருகேயுள்ள பூதப்பாண்டியில் வீட்டின் படிக்கட்டில் அமர்ந்திருந்த மூன்று வயது பெண் குழந்தையை வெறி நாய் கடித்துக் குதறியது . படுகாயம் அடைந்த குழந்தை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல, மாநகராட்சி ஊழியரான சுடலைமணி சென்ற இரு சக்கர வாகனத்தின் குறுக்கே நாய் பாய்ந்ததால் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஜனவரி,பிப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மட்டும் 4, 533 பேர்கள் நாய்கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் . கடந்த நான்கு ஆண்டுகளில் 52 ஆயிரம் பேர் நாய் கடிக்கு மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் தெருவில் சுற்றி தெரியும் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Tags :



















