1.6 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை

by Staff / 11-09-2023 04:03:01pm
1.6 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை

மகளிர் உரிமைத் தொகை பெற ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதி உள்ளவர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தகுதிவாய்ந்த பெண்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் செப்டம்பர் முதல் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் திட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.06 கோடி விண்ணப்பங்கள் சேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெறுகிறவர்கள் என்பதால் ஒரு கோடி பாராட்டுக்கு சமம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.


 

 

Tags :

Share via

More stories