திமுக எம்.பி கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு பரபரக்கும் போஸ்டரால் சர்ச்சை.

by Editor / 05-01-2025 11:40:56am
திமுக எம்.பி கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு பரபரக்கும் போஸ்டரால் சர்ச்சை.

திமுக எம்.பி கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ‘கட்சியை வழிநடத்து ஆட்சிக்கு வழிகாட்டு' என்ற வாசகத்துடன் கருணாநிதி, பெரியார் துணையோடு, திமுக கட்சிக் கொடியுடன் அண்ணா அறிவாலயத்தில் இருந்து தமிழ்நாடு சட்டப்பேரவை நோக்கி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் படைசூழ கனிமொழி செல்வது போலவும்,அய்யா கைத்தடியோடு அரியானை நோக்கி வருகிறார் அக்கா கனிமொழி 2026 என்றும்,மற்றொரு சுவரொட்டியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரையெல்லாம் தண்டி ஒரு பாதியில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படமும்,மறுபாதியில் கனிமொழி படமும் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கெல்லாம் ஒருபடி மேலே தன்மாவட்டத்திலிருந்து சில மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஏராளமான மகளிர் அணியினர் பேரூந்துக்களில் சென்னைக்கு வாழ்த்து சொல்ல புறப்பாட்டு சென்றுள்ளனர்.

 

Tags : திமுக எம்.பி கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு பரபரக்கும் போஸ்டரால் சர்ச்சை.

Share via