மாணவர்கள் வருகை பதிவு - நீதிமன்றம் கருத்து

வருகை பதிவு குறைவாக உள்ள மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பது, முறையாக வருகை பதிவு இருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கிவிடும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என பலமுறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர். வகுப்பை தொடர அனுமதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து மாணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Tags :