அபுதாபியில் அமெரிக்கா- ரஷ்யா மற்றும் உக்ரைன் அடுத்த பேச்சு வார்த்தை பிப்ரவரி 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

by Admin / 02-02-2026 09:56:13am
அபுதாபியில் அமெரிக்கா- ரஷ்யா மற்றும் உக்ரைன்  அடுத்த பேச்சு வார்த்தை பிப்ரவரி 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் அமெரிக்கா- ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஆன அடுத்த சுற்று முத்தரப்பு பேச்சு வார்த்தை பிப்ரவரி 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த இந்த பேச்சுவார்த்தை சில காரணங்களால் புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஊக்கரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தம் எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். போரை உண்மையான நிலையில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான பேச்சு வார்த்தைக்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை குறித்து அமெரிக்காவோ ரஷ்யாவோ எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அமெரிக்காவின் தூதர் மற்றும் ரஷ்ய தூதர் கிரில் டிமிட் ரிவ் ஆகியோர் அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் ஏற்கனவே சந்தித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via