சென்னை முழுவதும்  இலவச வைஃபை வசதி: மாநகராட்சி அறிவிப்பு

by Editor / 17-08-2021 05:17:18pm
சென்னை முழுவதும்  இலவச வைஃபை வசதி: மாநகராட்சி அறிவிப்பு



சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இலவச வைஃபை வழங்கும் சேவையை தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் சென்னை நவீனப்படுத்தும் 'சிங்கார சென்னை 2.0' திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தொழில்நுட்ப வசதி பெருகிவிட்ட நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காக இலவச வைஃபை இணைய வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சென்னையின் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்படும் என்றும் அங்கிருந்தபடி தங்களது செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் 30 நிமிடம் வரை இலவச இணைய சேவையை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via