ஒடிசாவில் நிலநடுக்கம்.. மக்கள் ஓட்டம்
ஒடிசாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு கோராபுட் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.05 மணியளவில் நிலம் லேசாக குலுங்கியது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் சத்தீஸ்கரில் உள்ள ஜக்தல்பூரில் இருந்து கிழக்கே 129 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. ஆனால் நிலநடுக்கத்தின் தீவிரத்தால் பீதியடைந்த மக்கள் வெளியே ஓடி வந்தனர். சமீபத்தில் கர்நாடகா, சென்னையிலும் லேசான அளவில் நில அதிர்வு உணரப்பட்டது.
Tags :